தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணிமுக்தா அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு! - Manimukta Dam

கள்ளக்குறிச்சி: மணிமுக்தா அணையிலிருந்து விவசாய பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.

மணிமுக்தா அணை  மணிமுக்தா அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு  கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்  Law Minister CV.Shanmugam  Kallakurichi District News  Manimukta Dam  Opening of water for irrigation from Manimukta Dam
Opening of water for irrigation from Manimukta Dam

By

Published : Dec 16, 2020, 2:02 PM IST

கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் பகுதியில் அமைந்துள்ள மணிமுக்தா அணையின் மொத்த நீர்மட்டம் 36 அடி, தற்போது 35.50 கொள்ளளவு நிரம்பியது. இந்நிலையில், இன்று விவசாய பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் கிரண் குர்ராலா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு விவசாய பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவைத்தார். இதன்மூலம், 10 கிராமங்கள் உள்பட புதிய பாசனப் பரப்பு நான்காயிரத்து 250 ஏக்கர் விவசாய நிலமும், பழைய பாசன பரப்பு ஆயிரத்து 243 ஏக்கர் விவசாய நிலமும் பயன்பெறும்.

இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு எம்எல்ஏ, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, முன்னாள் அமைச்சர் மோகன், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலை மாநிலத் தலைவரும் அதிமுக வடக்கு ஒன்றிய கழகச் செயலாளருமான ராஜசேகர், பொதுப்பணித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:மணிமுக்தா ஆற்றில் மணல் திருட்டை தடுக்க கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details