தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Rasi Palan: மிதுனம் ராசிக்கு குதூகலம்.. உங்க ராசிக்கான இன்றைய பலன் என்ன? - சிம்மம் ராசி பலன்

மே 2-ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்..

Etv Bharat
Etv Bharat

By

Published : May 2, 2023, 6:25 AM IST

மேஷம்:சந்தோஷமான செய்தியின் மூலம் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். இந்த செய்தி தனிப்பட்ட வகையில் இருக்கலாம் அல்லது உங்கள் தொழில் அல்லது பணி தொடர்பான செய்தியாக இருக்கலாம் அல்லது நிதி ஆதாயமாக இருக்கலாம். உங்கள் பெயர் திறனுக்கு ஏற்ற வகையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்: நீங்கள் இன்று சிறந்த முறையில், ஈடுபாட்டுடன் திட்டமிட்டு செயல்படுவீர்கள். அதனால் பரிவர்த்தனைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு, சிறந்த வகையில் கலை கையாளும் திறன் உங்களிடம் உள்ளது. நீங்கள் இன்று சிறந்த வகையில், நிபுணர் தன்மையுடன் செயல்பட்டு, உங்களுக்கு இட்ட பணிகளை நிறைவேற்ற அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்: இன்றைய தினத்தில், வீட்டில் குதூகலமும் மகிழ்ச்சியும் நிலவும். வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதற்கான விஷயங்களில் நீங்கள் அதிகம் ஈடுபாடு கொண்டு, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அவர்கள் மீது ஈடுபாடு காட்டுவதன் மூலம், நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

கடகம்: இன்றைய தினத்தை பொறுத்தவரை, நீங்கள் கடினமாக உழைத்த பணத்தை செலவிடுவதில் எச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். தேவையில்லாத நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவும், உங்களுக்குப் நெருக்கமானவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவும் நீங்கள் அவ்வாறு செயல்படுவது நல்லது. உங்கள் பணியிடத்தில் வேலை பார்க்கும் உங்கள் தன்மையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது.

சிம்மம்: உங்களுக்கு அனைத்தும், தங்கத் தட்டில் வைத்து கொடுக்கப்படும் என்ற எண்ணத்தை கொண்டிருக்க வேண்டாம். உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. இன்று நீங்கள் பொறுமையாக செயல்படுவது நல்லது. உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் இல்லாமல் இருக்கும்.

கன்னி: சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்து கொள்ளும் உங்களது தன்மையின் மூலம் நீங்கள் உங்கள் சுற்றியிருக்கும் மக்களை மகிழ வைப்பீர்கள். எதிர்பாராத சம்பவம் நேரிடலாம். கவலை கொள்ளத் தேவையில்லை. அவை உங்களுக்கு சாதகமான விஷயமாகவே இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும்.

துலாம்: இன்று, உங்களுக்கு ஆதாயமான நாளாக இருக்காது, குறிப்பாக நேர்காணலில் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு. நம்பிக்கையை கைவிட வேண்டாம். கடுமையாக உழைக்க வேண்டும். நமது உழைப்பிற்கு வருங்காலத்தில், ஏற்று பலன் கிடைக்கும்.

விருச்சிகம்: உங்களது அலுவலகத்தில், உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் உறுதியான நடவடிக்கை மேற் கொள்ளும் தன்மை கொண்டவர். இலக்குகளை அடைய நீங்கள் எந்த அளவிற்கும் சென்று வேலை பார்க்கும் திறமை கொண்டவர். புதுமையான கருத்துகளை உங்கள் சக பணியாளர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு: இன்று, வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதில் நேரம் அதிகம் செலவாகும். உங்களது பொறுமையான குணத்தினால், மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கவனமாக கேட்பீர்கள். இன்று உங்களுக்கு ஒரு ஆக்கபூர்வமான சாதகமான நாளாக இருக்கும்.

மகரம்: திருமணம் ஆகாதவர்கள் என்றால், நீங்கள் கனவில் சந்திக்கும் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் வாழ்க்கைத்துணையை சந்தித்ததில், நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களிடம் நீங்கள் மனம் திறந்து பேசுவீர்கள். உங்கள் காதல் துணையும் உங்கள் மீது, நிபந்தனையற்ற அன்பைப் பொழிவார்கள்.

கும்பம்: இன்று உங்களுக்கு குதூகலம் நிறைந்த நாளாக இருக்கும். ஆனால் உங்கள் சக பணியாளர்கள், தங்கள் வேலையை முடிக்க அதற்கான காரணங்களை உங்களை தெரிவிப்பார்கள். அதனால் உங்களது பொறுப்புகளை நீங்களே முடிப்பது நல்லது. உங்கள் மனதிற்குப் பிடித்தவர், உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஆதரவு அதிகம் தேவைப்படும். அந்த ஆதரவை கொடுக்கும் நபர் இன்று உங்களோடு இருப்பார். இன்று விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடைபெறும் என்பதால், மனம் தளர வேண்டாம். போட்டியில் முன்னேறிச் செல்ல உங்கள் கற்பனை திறனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

ABOUT THE AUTHOR

...view details