கள்ளக்குறிச்சி: மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த பள்ளி மாணவியின் மரணம் குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி பள்ளி குறித்த அதிர்ச்சி தகவல் இந்த நிலையில் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி மற்றும் உறுப்பினர்கள் துரைராஜ், சரண்யா, முரளி ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த பள்ளி குறித்து விசாரணை செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், கனியாமூர் பகுதியில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வந்த விடுதியானது உரிய அனுமதி இன்றி இயங்கதாக தகவல் கிடைத்துள்ளது.
முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் செயல்பாடுகள் குறித்து அவர்கள் துறை சார்ந்து பரிந்துரை செய்யப்படும். இதற்கு முன்பு அந்த பள்ளியில் மர்மமான முறையில் மாணவர்கள் இறந்துள்ளதாக இதுவரை எந்த ஒரு புகார் வரவில்லை. இதற்குப் பின்பு புகார் தெரிவித்தால் அதன் மீது விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் கூறினர்.
இதையும் படிங்க:மருத்துவர் டூ உளவுத்துறை ஐஜி - செந்தில்வேலன் கடந்து வந்த பாதை