சிறுவங்கூர் மற்றும் ரோடு மாமனந்தல் கிராமங்களில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் அனைத்து பொதுமக்களின் ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு,தேசிய ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றை சிறுவங்கூர் கிராம முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் தன் வசம் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு பணத்தை தராமல் ஏமாற்றி ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த ஊழல் குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவரிடம் நியாயம் கேட்ட சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் சென்றுள்ளார். அவரை அங்குள்ள மூன்று நபர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.