பிரதமர் மோடி அறிவுறுத்தியிருந்த மக்கள் ஊரடங்குக்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்திருந்தனர். மருந்துக்கடைகள் சிலவும் நேற்றைய தினம் மூடப்பட்டிருந்தன. நேற்றைய தினம் மருந்து கடைகளை திறந்து வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தை மக்கள் வலியுறுத்திய நிலையில், மருந்து கடை உரிமையாளர்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள தமிழ்நாடு மருந்துக் கடை உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் கே.கே. செல்வன் வந்திருந்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கரோனா வைரஸ் பரவுவதை முன்னிட்டு அனைவருமே முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை. ஆனால், பொதுமக்கள் அதிகமாக வாங்கி இருப்பு வைத்துள்ளதால் பற்றக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவினை ஏற்று நேற்று முதல் முக கவசம் மற்றும் கிருமி நாசினிகளின் விலையை குறைக்க உற்பத்தி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.