மத்திய அரசு சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணைகளில் 6 ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோரும் முறைகேடாக பணம் பெற்றுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதனையடுத்து ஆட்சியர் கிரண்குராலா, சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு, மூரார்பாளையம் கிராமங்களில் பொதுமக்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர், சங்கராபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள தனியார் கணினி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அங்கிருந்த கணினிகளை ஆய்வு செய்தபோது முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கணினி மையத்தை சீல் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் தாசில்தார் நடராஜன் முன்னிலையில், தனியார் கணினி மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அப்போது கள்ளக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குநர் வேலாயுதம், பி.டி.ஒ., நாராயணசாமி, வருவாய் ஆய்வாளர் தேவதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் -மாவட்ட ஆட்சியர்!