தேங்கி நிற்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் பொதுமக்களின் நலன் கருதியும் கட்டப்பட்ட கள்ளக்குறிச்சி கூடுதல் சார்பு நீதிமன்றத்தினை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணன் ராமசாமி, ரமேஷ் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், "கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நீதித்துறைக்காக தமிழ்நாடு அரசு 2,310 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 478 நீதிமன்றங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளன.
நீதி மன்றக் கட்டிடத்தை திறந்து வைத்த சி.வி. சண்முகம் சிறார்களின் பாலியல் குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்பதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதன்படி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாகவும், உயர் நீதிமன்றப் பரிந்துரைக்கு முன்பாகவும் இந்தியாவிலேயே முதலாவதாக தமிழ்நாடு அரசு 16 சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கி பெண் வழக்குரைஞர்களைப் பணியில் அமர்த்தியது.
கடந்த 8ஆண்டுகளில் 478 புதிய நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன - சி.வி. சண்முகம் வழக்கறிஞர்களிடம் பணிபுரியும் குமாஸ்தாக்களின் சேமநல நிதி இரண்டரை லட்சத்திலிருந்து ஐந்து லட்சமாக உயர்த்தி வழங்குவது குறித்து சட்டத்துறை மானியக் கோரிக்கையில் பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்னை: 50ஆவது பேச்சுவார்த்தையும் தோல்வி