கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மாம்பாக்கம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த கோவிலில் அங்குள்ள அகத்தீஸ்வரர் கோவில், முருகன் கோவில், விநாயகர் கோவில், அய்யனார் கோவில், வீரனார் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் இருந்த சுமார் 20க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பு கருதி வைக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்புகள் சுமார் 1 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவில் அர்ச்சகர் ரவி நேற்றிரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை வழக்கம்போல் கோவிலை திறக்க வந்தபோது முகப்பு கதவு திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது கோவிலின் பிரகாரத்தில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், அங்கு இரண்டு ஏணிகள் இருப்பதையும் பார்த்துள்ளார். ஒரு ஏணி கோவிலின் பிரகார பகுதியிலும், மற்றொரு ஏணி சுற்றுசுவர் பகுதியிலும் இருந்துள்ளது. உடனடியாக, காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின்பேரில், கோயிலுக்கு விரைந்த வந்த காவல் துறையினர், தீவிர சோதனை மேற்கொண்டனர்.