கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனித் தொகுதிக்கான சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், மூன்றாவது முறையாக வண்ணம் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு தொகுதி பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
இதனை கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான குமரகுரு திறந்து வைத்தார். இதில் கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் உடனிருந்தார். திறப்பு விழா முடிந்த பிறகு குமரகுரு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.