தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டை வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம் - handicap people

கள்ளக்குறிச்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டை வழங்க வேண்டி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பாக மாபெரும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

kallakkurichi news  kallakkurichi latest news  கள்ளக்குறிச்சி செய்திகள்  தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டை  தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டை வழங்க கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்  மாற்றுத் திறனாளிகள் போராட்டம்  மாற்றுத் திறனாளிகள்  கள்ளக்குறிச்சியில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்  National Rural Employment Card  handicap people Struggle to issue National Rural Employment Card  handicap people  handicap people protest
handicap people protest

By

Published : Sep 1, 2021, 9:16 AM IST

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், ஆட்சியர் அலுவலகம் முன்பு, மாவட்டச் செயலாளர் சாந்தியின் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்தக் காத்திருப்புப் போராட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் இரண்டு மாற்றுத்திறனாளிகளைப் பணி தள பொறுப்பாளராக நியமனம் செய்திட வேண்டியும், சுழற்சி முறையில் இல்லாமல் தொடர்ச்சியாக நூறு நாள்களுக்கு உறுதியாக வேலை வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பணிமாறுதல் கூடாது

இதனைத் தொடர்ந்து அரசு வெளியிட்ட அரசாணையின்படி நாளொன்றுக்கு நான்கு மணி நேரம் மட்டுமே வேலையை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அதேபோல் மாற்றுத்திறனாளிகளை எவ்வித காரணம் கொண்டும் பணிமாறுதல் கூடாதென்றும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆறுமுகம் சுப்பிரமணி, சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், அனைத்து கிளைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஆர்டிஐ ஆர்வலர்களைப் பாதுகாக்கக்கோரிய மனு - டிஜிபி தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details