கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார், கணக்கியல் பட்டதாரி ஆவார். இவரது கவனம் கணக்கியல் மட்டுமின்றி இயற்கை விவசாயத்திலும் திரும்பியுள்ளது. இதனால் தன்னுடைய வயல்வெளிகளில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய அதீத ஈடுபாடு எடுத்துள்ளார்.
இயற்கை முறையில் விவசாயம் செய்யும்போது முதலிரண்டு ஆண்டுகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதாவும், பின்னர்தான் கற்றுத் தேர்ந்து லாபம் ஈட்டியதாகவும் அசோக்குமார் பகிர்ந்தார்.