கள்ளக்குறிச்சி மாவட்டம் நாககுப்பம் மேம்பாலம் அருகே சேலத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்து எதிரே வந்த கார் மீது மோதியது.
இவ்விபத்தில் காரில் பயணம் செய்த முருகன், ஆஷீக்ஹீதர் ஆகிய இருவரும் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார் மீது அரசு பேருந்து மோதி இருவர் உயிரிழப்பு இதனால் அங்கு சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் இதே இடத்தில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மீண்டும் அதே இடத்தில் இன்று (ஜூலை 27) இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தான் தொடர்ந்து விபத்து நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சியில் தொடர் திருட்டு - இருவர் கைது