தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெருங்கும் பொங்கல்: உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் 2 கோடி மதிப்பில் ஆடு விற்பனை

கள்ளக்குறிச்சி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் இரண்டு கோடி ரூபாய்க்கு அதிகமாக ஆடு விற்பனை நடைபெற்றது.

ஆடுகள்
ஆடுகள்

By

Published : Jan 6, 2021, 12:40 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும். இதனுடன் ஆட்டுச்சந்தையும் நடந்துவருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்குவதற்கு வருவர்.

ஆடுகள்

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆட்டுச்சந்தையில் அதிகளவு ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. காலை முதல் ஆடுகள் விற்பனை தொடங்கி சுமார் மூன்று மணி நேரத்தில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு பொங்கல் பண்டிகையில் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 2 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஆடு விற்பனை நடந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆடுகள்

இதையும் படிங்க:போலி பணி நியமன ஆணை தயாரிப்பு: இருவருக்கு சிறை!

ABOUT THE AUTHOR

...view details