கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பாண்டூர் செல்லும் சாலையில் அரசு மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையில் இரவு காவலர் ஹரிதாஸ் கடை முன்பு தூங்கிக் கொண்டிருக்கும் போது, நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத அங்கு சென்றது.
அப்போது அந்தக் கும்பல் தூங்கிக் கொண்டிருந்த காவலரை தாக்கிவிட்டு, மதுக் கடையை உடைத்து கடையிலிருந்த மதுபாட்டில்களை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றனர்.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டை - பாண்டூர் சாலையில் சென்றுகொண்டிருந்த அந்தக் கும்பலை, இரவு ரோந்தில் ஈடுப்பட்டிருந்த காவலர் தீபன் வழிமறித்து விசாரித்தார். அப்போது, அந்தக் கும்பல் காவலரை தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளது.