தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Arrest: கள்ளக்குறிச்சியில் மலைக்குறவர்கள் மீது பொய்வழக்கு? - 25 சவரன் நகைகள் பறிமுதல்! - 25 sovereign jewelry confiscated

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்த 3 பேர் மீது பொய் வழக்குப் (Arrest) போட முயற்சிப்பதாகவும், அவர்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Narikuravas Arrest
Narikuravas Arrest

By

Published : Nov 17, 2021, 8:13 PM IST

Updated : Nov 17, 2021, 8:51 PM IST

கள்ளக்குறிச்சி: சின்னசேலம், தியாகதுருகம் உள்ளிட்டப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.

நவம்பர் 14ஆம் தேதி சின்னசேலத்தைச் சேர்ந்த பிரகாஷ், அவரது உறவினர்கள் தர்மராஜ், சக்திவேல் ஆகிய 3 பேரையும் சீருடை அணியாத காவலர்கள் திடீரென இரவு நேரத்தில் வலுக்கட்டாயமாக விசாரணைக்கு (kuravas Arrest) அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மலைக்குறவர்கள்

குற்றங்களை ஒப்புக் கொள்ள அடி, உதை

இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த பரமசிவத்தையும் விசாரணை எனக் கூறி, வேனில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாதவர்களை, விசாரணை என்ற பெயரில் காவல் துறையினர் அடிக்கடி துன்புறுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை மீட்டுத் தரக்கோரி, அவர்களது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்தோர் பேசுகையில், "எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடாதவர்களை அடித்து உதைத்து திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை ஒப்புக்கொள்ளச் சொல்லி காவல் துறையினர் மிரட்டுகின்றனர்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மலைக்குறவர்களின் உறவினர்கள் பேசுவது தொடர்பான காணொலி

கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தற்போது எங்கு உள்ளனர் எனத் தெரியவில்லை. நாங்கள் கூலி வேலை செய்து அன்றாடம் பிழைப்பு நடத்தும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உண்மை நிலையை அறிந்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களை விடுவிக்க வேண்டும்' என்றனர்.

25 சவரன் நகைகள் பறிமுதல்

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் பிரகாஷ், தர்மராஜ் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களைக் குறிவைத்து தாலி செயினை அறுத்து செல்லும் வழக்கமுடையவர்கள் எனவும், அவர்களிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீதமுள்ள சக்திவேலை மட்டும் இதுவரையிலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பதால், உடனடியாக அவரை மீட்டுத்தரக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:#WeStandwithSurya: 'சூர்யாவிற்கு அரசும், காவல் துறையும் ஆதரவு'

Last Updated : Nov 17, 2021, 8:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details