கள்ளக்குறிச்சி அருகே உளுந்தூர்பேட்டையில் நரிக்குறவர் இன மக்களுக்கு கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு, 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தைச் சார்ந்த குடும்பத்தினருக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை, தன்சொந்த செலவில் மறுசீரமைப்பு செய்துகொடுத்தார்.
இதனை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து ஒவ்வொரு குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்காக ரூ.10,000 மதிப்புள்ள பாசிமணி, ஊசிமணி உள்ளிட்ட அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களை வழங்கி அவர்களோடு, அமர்ந்து சிற்றுண்டி மற்றும் தேனீர் அருந்தி சிறப்புரையாற்றினார்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'அதிமுக அரசு நரிக்குறவர் இன மக்கள் உள்ளிட்ட ஏழை மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில், இலவச மடிக்கணினி வழங்கியதோடு, மட்டுமல்லாமல் இந்திய அளவில் உயர் கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை வகுத்தது.
ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் ஏழைகளுக்காக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றான பொங்கல் பண்டிகைக்கு கரும்பினை வைத்து படைப்பது நம்முடைய மரபு. ஆனால், திமுக அரசு கரும்பை தடை செய்தது.