ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், தள்ளாடிவரும் மது பிரியர்களிடம், பல பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை பிடிப்பதில் காவல் துறையினருக்கு பெரும் சவாலக இருக்கும் நிலையில் கள்ளக்குறிச்சியில் பல இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடப்பதாகவும், ஒரு லிட்டர் ஆயிரம் ரூபாய் முதல், ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனைக்கு செய்துவருவதாகவும் காவல் துறையினருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் கள்ளக்குறிச்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள அனைகறை, விளம்பாவூர், உலகங்காத்தான் உள்ளிட்ட பகுதிகளிலும், சின்னசேலத்தை சுற்றியுள்ள ஐந்திற்கும் மேற்பட்ட பகுதிகளிலும் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.
பின்னர், அனைத்து பகுதிகளுக்கும் விரைந்த காவல் துறையினர் கள்ளச்சாராயம் விற்ற இரண்டு பெண்கள் உள்பட 11 பேரை கைது செய்தனர். இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
கள்ளச்சாராயம் விற்றவர்கள் சிறையில் அடைப்பு இந்நிலையில் சாராய வழக்கில் பெரும்பாலும் சாராய வியாபாரிகளை கைது செய்யாமல் கூலித் தொழிலாளிகளை மட்டும் காவல் துறையினர் கைது செய்வதால் கள்ளச்சாராய விற்பனையை அடியோடு ஒழிக்க முடியவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: டிக்டாக்கில் கள்ளச்சாராயம் காய்ச்சும் காணொலி: தேனி அருகே 4 பேர் கைது