கள்ளக்குக்குறிச்சியில் நடைபெற்ற பாஜக மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவிற்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், ஆக.31 வருகை தந்து திறந்துவைத்தார். இதில் 144 தடை உத்தரவை மீறி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி ஊர்வலமாகச் சென்றனர்.
144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட பாஜக: 250 பேர் மீது வழக்குப்பதிவு! - 144 தடை உத்தரவு
கள்ளக்குறிச்சி : பாஜக அலுவலக திறப்பு விழாவிற்கு அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்பட்டதால், அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்பட 250 பேர் மீது கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் மீது வழக்கு
இதனால் தடையை மீறி நோய்த்தொற்று பரவும் விதமாக நடந்துகொண்டது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எல்.முருகன் உள்ளிட்ட 250 பேர் மீது தியாகதுருகம், கள்ளக்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.