தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜன.30) கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் 7 நபர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், மீதமுள்ள மூன்று பேர் விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மாவட்டத்திலும் பணி நியமனம் பெற்றுள்ளனர்.