கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் தனி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில் குமாரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச் 20) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
தேர்தல் விதிமுறைகளை மீறிய அதிமுகவினர்- கண்டுகொள்ளாத பறக்கும் படை - admk campaigns
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறிய அதிமுகவினர்
அப்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பரப்புரைக்குக் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு அதிமுகவினர் சாலையிலேயே பணப்பட்டுவாடா செய்ததாகவும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உரிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.