கள்ளக்குறிச்சி: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்-விற்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அவரின் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் துறையினர் நேற்று (ஜூலை 23) குட்கா ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
குட்கா பொருள்கள் பறிமுதல்
அப்போது சங்கராபுரம் அருகே குட்கா பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும், பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இது சம்பந்தமாக மாவட்டத்தில் 23 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஒருவரை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 6ஆயிரத்து 250 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து காவல் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல்!