தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓடும் பேருந்தில் ஏற முயன்ற பள்ளி மாணவன்.. காலில் ஏறிய பின்சக்கரம் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

School boy fallen from running bus: அரசுப் பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவன் தவறி கீழே விழுந்தபோது, பின்பக்க டயர் ஏறி இறங்கி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

school boy fallen from running bus
ஓடும் பேருந்தில் ஏற முயன்ற பள்ளி சிறுவன்... காலில் ஏறிய பின்பக்க சக்கரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 8:08 AM IST

ஓடும் பேருந்தில் ஏற முயன்ற பள்ளி சிறுவன்... காலில் ஏறிய பின்பக்க சக்கரம் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

கள்ளக்குறிச்சி:உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர், காளிதாஸ். இவருக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். அச்சிறுவன், உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று பள்ளி முடிந்த பின்னர் வீட்டுக்குச் செல்வதற்காக உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து ஆரிநத்தம் கிராமத்திற்கு அரசுப் பேருந்து வந்ததை அறிந்த பள்ளி மாணவன், ஓடிச் சென்று அந்த பேருந்தில் ஏற முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அப்பொழுது, பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்த மாணவனின் கால் மீது, பின்பக்க டயர் ஏறி இறங்கியதில்
மாணவர் படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் காயமடைந்த சிறுவனை, அருகில் இருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் இச்சம்பவம் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மாணவர் அரசுப் பேருந்தில் ஓடிச் சென்று ஏறி, பின்பு தவறி விழுந்து காயமடைந்த சிசிடிவி காட்சி வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: “ஆமை வேகத்தில் கூட சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை” - மோட்டூர் கிராமத்தினர் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details