ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள ஒட்டர்கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார், இவர் தனது குடும்பத்துடன் விவசாயம் மற்றும் காளான்பண்ணை வைத்து தொழில் செய்துவருகிறார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை:இந்நிலையில் கோரமடை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கூட்டுறவு பால் பண்ணைக்கு பால் ஊற்ற செல்லும்போது தினந்தோறும் நந்தகுமார் சிறுமியைப் பின் தொடர்ந்து தான் வைத்திருக்கும் செல்போன் மூலம் தொடர்ந்து படம் எடுத்து வருவதாகவும், சிறுமி சைக்கிளில் பால் கொண்டு சென்று பாலை ஊற்றிவிட்டு திரும்ப தனது வீட்டிற்கு செல்லும் வழியில் தனது இருசக்கர வாகனத்தில் மேலே விடுவது போல பயமுறுத்தியும், சிறுமியை வழிமறித்து தான் உன்னை காதலிக்கிறேன் நீயும் என்னை காதலிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியும், நான் கூப்பிடும் போது என்னுடன் வரவேண்டும் இல்லையென்றால் உன்னை வாழ விடமாட்டேன் என்று கூறியுள்ளார்.