ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தலமலை வனப்பகுதியில் ஏராளமான புலிகள், சிறுத்தைகள்,யானைகள், புள்ளிமான்கள் உள்ளன. இந்நிலையில் வனத்திலிருந்து வெளியேறிய புள்ளிமான் குட்டி ஒன்று வழி தவறி தொட்டபுரம் கிராமத்துக்குள் புகுந்தது.
மான் குட்டியை விரட்டிய நாய்கள்: மீட்ட இளைஞர்கள் - சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
ஈரோடு: தலமலை வனப்பகுதியில் வழி தவறிய புள்ளி மான் குட்டியை நாய்கள் துரத்திய நிலையில் அதனை இளைஞர்கள் மீட்டனர்.
deer
மான்குட்டியை கண்ட தெரு நாய்கள் அதனை துரத்த ஆரம்பித்தன. அப்போது அங்கிருந்த இளைஞர்கள் புள்ளி மான் குட்டியை தெருநாய்களிடமிருந்து காபற்றினர்.
பின்பு இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் மான் குட்டியை பரிசோதித்தனர். மான்குட்டியின் உடல்நிலை சீராக இருப்பதால் மான் குட்டியை மீண்டும் தலமலை வனப்பகுதியில் உள்ள மான் கூட்டத்தில் விட்டனர்.