ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் நேதாஜி வீதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (55). இவரது மகன் மௌலி (25). இவர் காங்கேயத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் காவல் பணியாளாராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மாதம் ஒருமுறை வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த 20ம் தேதி வீட்டிற்கு வந்தவுடன் சிறிது நேரத்திலேயே வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், வெளியே சென்ற மௌலி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், மகனை கண்டுபிடித்து தர வேண்டுமென அவரது தந்தை பொன்னுசாமி மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் மீது மொடக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இன்று (மார்ச் 1) ஈரோடு வெண்டிபாளையம் அருகே உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் காணாமல் போன மௌலி, உடல் சிதைந்து அழுகிய நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். மௌலி மதுபான கடையில் பணம் திருடியதாகவும், அங்கு அவரை சிலர் அடித்ததாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மௌலி அடித்து கொலை செய்யப்படாரா? இல்லை போதையில் நீரில் மூழ்கி இறந்தாரா? என உடலை மீட்டு மொடக்குறிச்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு: கூட்டுறவு வங்கிகளில் மோசடியில் ஈடுபடும் அலுவலர்கள்