தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பு கடித்து இளம்பெண் இறப்பு... தண்ணீர் பிடிக்க சென்றபோது ஏற்பட்ட சோகம் - பாம்பு கடித்து இளம்பெண் இறப்பு

ஈரோட்டில் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றபோது பாம்பு கடிதத்தில் இளம்பெண் உயிரிழந்தார்.

பாம்பு கடித்து இளம்பெண் இறப்பு
பாம்பு கடித்து இளம்பெண் இறப்பு

By

Published : Aug 20, 2022, 9:23 PM IST

ஈரோடு: மொடக்குறிச்சி அருகேவுள்ள பஞ்சலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவி திவ்யபாரதி. இவர், தனது வீட்டின் சுற்றுசுவர் அருகே உள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிக்க குழாயை திறக்க சென்ற போது ஏதோ ஊசி குத்தியது போல் வலி ஏற்பட்டுள்ளது.

ஏதேனும் பூச்சி கடித்திருக்கலாம் என நினைத்த அவர் அருகில் கணபதிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் அறிகுறிகளை பார்த்த மருத்துவர் பாம்பு கடித்து இருக்கலாம் என கூறி இருக்கிறார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்கிடையே பாம்பு பிடி வீரர் யுவராஜ் என்பவரை அழைத்து வந்து வீட்டின் அருகே பாம்பை தேடியுள்ளனர். அப்போது அந்த இடத்தில் திவ்யபாரதியை கடித்த பாம்பு சுவர் ஓட்டையில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் யுவராஜ் பாம்பை லாவகமாக பிடித்தார்.

அது கட்டு விரியன் பாம்பு என தெரியவந்தது. இதற்கிடையே திவ்யபாரதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:குடும்ப தகராறில் இரு குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்த தந்தை

ABOUT THE AUTHOR

...view details