தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா களப் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி! - யோகா பயிற்சி

ஈரோடு: கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சித் துறையினருக்கு மாநகராட்சி அலுவலகத்தில் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.

Yoga Training for Corona Fieldworkers!
Yoga Training for Corona Fieldworkers!

By

Published : Sep 4, 2020, 3:06 PM IST

தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக கரோனா வைரஸ் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு யோகாவில் பயிற்சி இருப்பதாகவும், முறையாக யோகாவை கற்றுக் கொண்டு பயிற்சி மேற்கொண்டால் அதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும் என்றும் யோகா பயிற்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மாநிலம் முழுவதும் தன்னார்வ அமைப்பினர்கள் உதவியுடன் நேரடியாக களப்பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கான யோகா பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் களப் பணியாளர்களாக ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஈரோட்டைச் சேர்ந்த உணர்வுகள் அமைப்பின் சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.

yoga-training-for-corona-fieldworkers

முறையான யோகா பயிற்சியாளர்களைக் கொண்டு நடைபெற்ற இந்த முகாமில், எளிமையான முறையில் யோகா கற்றுக் கொடுக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு யோகாவின் பலன்கள் குறித்தும் தெளிவு படுத்தப்பட்டன. இந்த யோகா பயிற்சி முகாமில் 200க்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் பங்கேற்று, பயிற்சிகளைப் பெற்றனர்.

இதையும் படிங்க:திருச்சியில் சோப்பில் மறைத்து கடத்த முயன்ற தங்கம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details