சத்தியமங்கலம் அருகே பசுனாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் கிறிஸ்டோபர் என்பவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் சாகுபடி செய்து வந்துள்ளார். இதன் அருகில் புலிகள் காப்பகம் இருப்பதனால் காட்டிற்குள் இருந்து வரும் பன்றிகளும் யானைகளும் பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளன. இதனைத் தடுத்து நிறுத்த தடுப்பு வேலி அமைத்துள்ளார் ராஜேந்திரன். இருப்பினும் யானைகள் தடுப்பு வேலிகளைத் தாண்டி மக்காச்சோளப் பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.
மின்வேலியால் பெண் யானை பலி! - erode
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே சுனாபுரத்தில் மின்சாரம் தாக்கி 12 வயது பெண் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண்யானை
இதனையடுத்து, ராஜேந்திரன் சட்டவிரோதமாக மின்சாரத்தைத் திருடி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு மக்காச்சோளப் பயிர்களை மேய வந்த 12 வயதுள்ள பெண் யானை, மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையின் உடலை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்து, ராஜேந்திரனிடம் விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி 12 வயது பெண் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.