ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனச்சரகம் கொத்தமங்கலம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இன்று காலை பசுவபாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் முகாமிட்டன.
"யப்பா!... வாங்க போலாமா" கூட்டம் கூட்டமாக வந்த யானைகள்! - சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அருகே கிராமப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் முகாமிட்ட யானைக் கூட்டத்தை பொதுமக்கள் வனப்பகுதிக்கு விரட்டியடித்த வீடியோ வெளியாகியுள்ளது.
கூட்டம் கூட்டமாக வந்த காட்டு யானைகள்
காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடுவதை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து, யானைகள் ஊருக்குள் நுழைய விடாமல் சத்தமிட்டு யானைகளை அடர் வனப்பகுதிக்கு விரட்ட முயன்றனர். பின்னர் பொதுமக்களின் சத்தம் கேட்ட காட்டு யானைகள் மெதுவாக வனப்பகுதி நோக்கி சென்றதால் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
இதையும் படிங்க:'தமிழ்நாடு வாழ்க' கோவை மக்கள் நீதி மய்யம் போஸ்டர்!