தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தலைக்கு தில்ல பார்த்தீயா...' ஒய்யாரமாக ஊருக்குள் வாக்கிங் சென்ற காட்டுயானை - ஈரோடி ஊருக்குள் புகுந்த யானை

பவானிசாகர் அணை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒய்யாரமாக சாலையில் நடந்து செல்வதைக் கண்ட ஊர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஒய்யாரமாக சாலையில் நடந்த காட்டு யானை
ஒய்யாரமாக சாலையில் நடந்த காட்டு யானை

By

Published : Dec 29, 2022, 4:02 PM IST

'தலைக்கு தில்ல பார்த்தீயா...' ஒய்யாரமாக ஊருக்குள் வாக்கிங் சென்ற காட்டுயானை

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய தோட்டங்களில் பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் பவானிசாகர் அணை அருகே உள்ள புங்கார் கிராமத்தில் நள்ளிரவில் ஒரு காட்டு யானை ஊருக்குள் புகுந்து தெருக்களில் ஒய்யாரமாக நடந்து சென்றது. காட்டு யானை ஊருக்குள் நடமாடுவதைக் கண்ட கிராம மக்கள் அச்சமடைந்தனர். கிராம மக்கள் சத்தம் போட்டு காட்டு யானையை விரட்ட முயற்சித்தனர்.

ஊருக்குள் நுழைந்த காட்டு யானை ஒவ்வொரு தெருவாக நடமாடிய பின், மெதுவாக விவசாயத் தோட்டங்களில் நுழைந்து வனப்பகுதி நோக்கி சென்றது. யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் பகுதிகளில் வனத்துறையினர் ரோந்துப்பணி மேற்கொண்டு, காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: Video: பழைய குற்றால அருவியில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை மீட்ட இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details