சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை, வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால் காட்டு யானைகள் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக, கர்நாடக மாநிலத்திலிருந்து கரும்பு ஏற்றிவரும் லாரிகளில், சில லாரிகள் அதிகளவில் கரும்புகளை ஏற்றி வருவதால் சோதனைச்சாவடியின் உயர்தடுப்பு கம்பியில் சிக்கிக்கொள்கிறது. இதனால் உபரிக் கரும்புகள் சோதனைச்சாவடி அருகே கொட்டப்படுகின்றன.
கொட்டப்பட்ட கரும்புகளைத் தின்பதற்காக அவ்வழியே செல்லும் காட்டுயானைகள் அங்கேயே முகாமிடுகின்றன. இதேபோல் இன்று அதிகாலை அங்குவந்த ஒற்றைக் காட்டுயானை நீண்டநேரம் கரும்புத் துண்டுகளை தும்பிக்கையால் எடுத்தபடி அங்கேயே நின்றுகொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.