ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. கர்நாடகாவிலிருந்து அதிக கரும்பு பாரம் ஏற்றும் லாரிகள் பண்ணாரி சோதனைச் சாவடியில் அதிகமான கரும்புத்துணடுகளை வீசியெறிவதால் யானைகள் தினம்தோறும் சோதனைச் சாவடியில் முகாமிட்டு வருகின்றன.
சாலையோர கடைகளை சேதப்படுத்திய காட்டுயானை - Bannari checkpost
ஈரோடு: சத்தியமங்கலம் பண்ணாரி சோதனைச் சாவடியில் கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்திருந்த யானை, கரும்பு கிடைக்காத விரக்தியில் அருகே இருந்த சோதனைச்சாவடி, காவல்நிலைய மேற்கூரை, சாலையோர கடைகளை சேதப்படுத்தியது.
இந்நிலையில், நேற்றிரவு (செப். 12) வந்த காட்டு யானை ஒன்று கரும்பு லாரிகளை எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால் கரும்பு கிடைக்காமல் லாரியை பின்தொடர்ந்து சென்று கரும்பை பிடுங்க முயற்சித்தது. ஆனால் கரும்பு கிடைக்காத ஆத்திரத்தில் பண்ணாரி சோதனைச்சாவடி காவல்நிலைய மேற்கூரையை சேதப்படுத்தியது. நள்ளிரவில் இரண்டு மணிநேரமாக யானை நகராமல் நின்றது. அதைத் தொடர்ந்து, அதிகாலை பண்ணாரி கோயில் சாலையோரத்தில் இருந்த பெட்டிக்கடைகளை சேதப்படுத்தியது.
இதில் கடையில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன. மேலும் யானை அட்டகாசத்தில் பெட்டிக்கடையில் தூங்கிக்கொண்டிருந்த பழனிசாமி என்பவர் தப்பியோடினார். அந்த பெட்டிகடையையும் யானை சேதப்படுத்தியது. கரும்புதுண்டு சாப்பிட்டு பழகியபோன யானையின் அட்டகாசத்தால் பண்ணாரி சோதனைச்சாவடி பணியாளர்கள், சாலையோர கடைகள் வைத்திருப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகள் மீண்டும் வராதபடி காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என சோதனைச்சாவடி பணியாளர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.