தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் மனைவி கொலை: தப்பியோடிய கணவர் உட்பட 2 பேர் கைது! - மனைவி கொலை

ஈரோடு: சத்தியமங்கலத்தில் காதல் மனைவியை கொலை செய்து தப்பியோடிய கணவர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொலை
கொலை

By

Published : Aug 3, 2020, 8:55 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த அக்கரைத்தத்தப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் சாஸ்தா மூர்த்தி - அமுதா. இந்தத் தம்பதியின் மகள் பவித்ரா, சில ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த வீரமணிகண்டனை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

பவித்ராவுக்கும், வீரமணிகண்டனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தாயார் வீட்டில் பவித்ரா குழந்தைகளுடன் வசித்து வந்தார். பவித்ராவை குடும்ப நடத்த வீரமணிகண்டன் பலமுறை அழைத்துள்ளார். ஆனால் பவித்ரா அவருடன் செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வீரமணிகண்டன், தனது நண்பருடன் நேற்றிவு (ஆகஸ்ட் 2) பவித்ரா வீட்டுக்குச் சென்று, அவரை சரமாரிய வெட்டினார்.

அப்போது இதைத் தடுக்க வந்த மாமனார் சாஸ்தா மூர்த்தி, மாமியார் அமுதா, பவித்ராவின் பாட்டி ஆகியோரையும் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த பவித்ரா அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்தநிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் தப்பியோடி வீரமணிகண்டன், அவரது நண்பர் ராம்குமார் ஆகியோரை பவானிசாகர் காவல்துறையினர் கைது செய்து, இன்று(ஆகஸ்ட் 3) சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details