தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத் தகராறு காரணமாக மனைவி தற்கொலை: துக்கம்தாளாமல் கணவரும் தவறான முடிவு! - குடும்ப பிரச்னை காரணமாக மனைவி தற்கொலை

ஈரோடு: குடும்பத் தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதையடுத்து மன அழுத்தத்திலிருந்த கணவரும் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

commits suicide
commits suicide

By

Published : Dec 2, 2020, 1:57 PM IST

ஈரோடு சாஸ்திரிநகர் அருகேயுள்ள வாய்க்கால்மேடு குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கட்டடங்களில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாகப் பணிபுரிந்துவந்தார். இவருக்கும் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த செளந்தர்யா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

மணிகண்டன் தனது தாயார், மனைவியுடன் வாழ்ந்துவந்துள்ளார். குடும்பத்திலுள்ள பிரச்சினை காரணமாக கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனையடுத்து நவம்பர் 13ஆம் தேதி செளந்தர்யா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மனைவி தற்கொலை செய்துகொண்டதற்குப் பிறகு மணிகண்டன் தொடர்ந்து கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் மனைவி தற்கொலைக்குத் தானும் காரணமென்று கூறியபடியே வேலைக்குச் செல்லாமலும் இருந்துவந்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட கணவன் - மனைவி

இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய மணிகண்டனின் தாயார் மாரியம்மாள் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து விரைந்துவந்த உறவினர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் அங்கு வந்த காவல் துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மனைவி இறந்த சோகம் தாங்காமல் கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவர்களது உறவினர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details