தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா விற்ற மூதாட்டியை மாறுவேடத்தில் சென்று கைது செய்த போலீஸ்!

ஈரோடு: பவானியில் கஞ்சா விற்ற மூதாட்டியை மாறுவேடத்தில் சென்று காவலர்கள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.

ஞ்சா விற்று வந்த மூதாட்டி

By

Published : Mar 16, 2019, 10:47 PM IST

ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்தவர்மகேஸ்வரி. இவர் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக பவானி தனிப்படை காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.மேலும் கஞ்சாவை மொத்த விலைக்கு வாங்கி பிற மாவட்டங்களுக்கு விற்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மூதாட்டி மகேஸ்வரியை ரகசியமாக கண்காணித்து வந்த காவலர்கள்நேற்று மாறுவேடத்தில் சென்றனர்.

அப்போது வாடிக்கையாளர் போன்று மூதாட்டியிடம் 5 கிராம்கஞ்சாவை100 ரூபாய்க்கு வாங்கினர். அப்போது மூதாட்டி கஞ்சா விற்பனை செய்வது உறுதியாகியதையடுத்து அவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் முதலில் சுமார் 250 கிராம் மதிப்பிலான கஞ்சா மட்டுமே தன்னிடம் உள்ளதாக கூறினார், காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது, வீட்டில் 12 .5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது.

கஞ்சா விற்று வந்த மூதாட்டி

இதனைத் தொடர்ந்து மகேஸ்வரியிடம் இருந்து 12 கிலோ 750 கிராம் மதிப்பிலான கஞ்சாவையும் ரூ.53ஆயிரம் ரொக்கப்பணத்தையும் பவானி காவலர்கள் பறிமுதல் செய்தனர்.இதனையடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details