சென்னை:பவானிசாகர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்று கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் முதல் போக நன்செய் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது.
கரை உடைப்பு
கீழ்பவானி வாய்க்காலில் ரூ.194 கோடி செலவில், கரைகளைப் பலப்படுத்தி கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டதால், நசியனூர் அருகே மலைப்பாளையம் என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்காலில் கரை உடைப்பு ஏற்பட்டது. அப்போது ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.