தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 முதல் 12 சதவிகிதம் மேல் ஜிஎஸ்டி இல்லா தீர்மானம்- விக்கிரமராஜா வலியுறுத்தல்! - எம்பி தேர்தல்

ஈரோடு: "வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சரக்கு மற்றும் சேவை வரியில் 5 முதல் 12 சதவீதத்திற்கு மேல் வரி விதிப்பு இல்லாத வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

vikramaraja

By

Published : Feb 3, 2019, 10:59 PM IST


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் வணிகர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் புறக்கணித்து விட்டதாக கூறிய அவர், வரும் காலங்களில் 60 வயதிற்கு மேற்பட்ட வணிகர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஜிஎஸ்டி மற்றும ஆன்லைன் வர்த்தகத்தால் தமிழகத்தில் 27 சதவீதம் வரை தொழில்கள் நலிவடைந்து உள்ளதாக வேதனை தெரிவித்த அவர், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சரக்கு மற்றும் சேவை வரியில் ஐந்து முதல் 12 சதவீதத்திற்கு மேல் வரி விதிப்பு இல்லாத வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மே 5ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள வணிகர்களின் மாநாடு வணிகர்களின் வாக்கு வங்கியை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தும் வகையில் இருக்குமென கூறினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வணிகர்கள் நலனை மேம்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details