ஈரோடு மாவட்டம் தொட்டிப்பாளையத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார். முகாமில் மாடுகளுக்கு ஏதேனும் நோய் தொற்று இருக்கிறதா என்பதை ஸ்கேன் கருவி மூலம் கண்டறிந்த மருத்துவர்கள் கால்நடைகளுக்கு மருந்துகள் வழங்கினர்
கால்நடைகளை காக்க நடைபெற்ற சிறப்பு முகாம்! - மாவட்ட ஆட்சியர் கதிரவன்
ஈரோடு: கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார்.
கால்நடை சிறப்பு முகாம்
இதனைத்தொடர்ந்து ஆடுகளுக்கு தொண்டை அடைப்பான், குடற்புழு நோய் ஆகியவற்றினை கண்டறிந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டன. மேலும் சினை பரிசோதனை, கால்நடை தடுப்பூசி, நோய் மாதிரி பொருட்கள் பரிசோதனை,கோழிக் கழிச்சல் போன்றவைகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான கால்நடை வளர்ப்பவர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.