ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு சத்தியமங்கலம் வழியாக வேன் சென்று கொண்டிருந்தது.
ஓட்டுநர் பசுவண்ணா, தொழிலாளர்கள் மூன்று பேர் இருந்தனர். சத்தியமங்கலம் - மைசூர் சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது. பாதாள சாக்கடைக்காக தோண்டி மூடப்பட்ட குழியில் மண் போட்டு மேடான பகுதியாக மாற்றி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது இருட்டில் வேகமாக சென்ற வேன், திட்டான அந்த மண் மீது ஏறிய நிலையில் அதன் சக்கரங்கள் அதில் சிக்கி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேரும் காயமடைந்து நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். சம்பவம் நடந்த இடம் குடியிருப்பு பகுதி என்பதால் மக்கள் அதிகளவில் திரண்டனர். இதனையடுத்து, அங்கு வந்த மீட்பு வாகனம் மூலம் சாக்கடையில் கிடந்த வேனை மீட்டனர். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மணப்பாறையில் கஞ்சா விற்ற இருவர் கைது