தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோபிசெட்டிபாளையத்தில் தடுப்பூசி போடும் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு - Vaccination work at Gobichettipalayam: Erode District Collector Krishnan Unni

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் கரோனா பரசோதனை மையம், கோபி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை, கோபி கலை அறிவியல் கல்லூரியில் சிகிச்சை மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி ஆய்வுசெய்தார்.

District Collector Krishnan Unni Inspection
District Collector Krishnan Unni Inspection

By

Published : Jun 21, 2021, 11:17 PM IST


கோபிசெட்டிபாளையம் நகராட்சி, ஊராட்சிப் பகுதியில் கடந்த இரண்டு மாத காலமாக கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

அதைத்தொடர்ந்து கோபிசெட்டிபாளையம், சுற்றுப்புறப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதனால் நகரில் பல்வேறு இடங்களில் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் கரோனா பரிசோதனை மையம், சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள கரோனா பரிசோதனை மையங்கள், கோபி அரசு மருத்துவமனை மற்றும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையங்கள், கோபி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி ஆய்வுசெய்தார்.

ஆய்வின்போது பரிசோதனைக்குத் தேவையான உபகரணங்கள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

ABOUT THE AUTHOR

...view details