ஈரோடு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சியில் 48ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சிவஞானம் போட்டியிடுகிறார். இவர் அப்பகுதியில் 28 ஆண்டுகளாக முடிவெட்டும் தொழில் செய்துவருகிறார்.