சத்திமங்கலம் அடுத்த தாளவாடி எல்லை கட்டையைச் சேர்ந்தவர் குருநாதன். ஜவுளி வியாபாரியான இவர், வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக தாளவாடி போலீசாருக்கு குருநாதன் புகார் அளித்தார்.
இருசக்கர வாகனம் திருடிய இருவர் கைது - two wheeler theft sathyamangalam
ஈரோடு: ஜவுளி வியாபாரியின் இருசக்கர வாகனத்தை திருடிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருசக்கர வாகனம் மீட்பு
இதனிடையே, போலீசார் மாநில எல்லையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இவர்கள் தான் குருநாதன் வண்டியை திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த தர்மராஜ், கருப்புசாமி ஆகியோரை போலீசார் கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.