ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள சதுமுகை கிராமத்தில் உள்ள பவானி ஆற்றிலிருந்து மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், காவல்துறையினர் நேற்றுமுன்தினம் இரவு சத்தியமங்கலம், சதுமுகை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தின் முன்புறம் இரண்டு முட்டை மணலுடன் வந்த இரண்டு நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
பவானி ஆற்றில் மணல் கடத்திய இருவர் கைது!
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த சதுமுகை கிராமத்தில் உள்ள பவானி ஆற்றிலிருந்து இருச்சக்கர வாகனம் மூலம் மணல் கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பவானி ஆற்றில் மணல் கடத்திய இருவர் கைது
விசாரணையில், அவர்கள் சதுமுகையை சேர்ந்த மோகன்ராஜ்(42), ஆனந்தகுமார்(42) என்பது தெரியவந்தது. இருவரும், பவானி ஆற்றிலிருந்து மணல் எடுத்து விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவர் மீது சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.