தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அந்தியூரில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது! - அந்தியூரில் ஆள்கடத்தல் விவகாரம்

அந்தியூரில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 11, 2022, 4:41 PM IST

ஈரோடு: அந்தியூர் ஏஎஸ்எம் காலனியைச் சேர்ந்தவர் அனிபா (55). இவரது நண்பர்கள் எண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சித்தன், எழுமாத்தூர் வேலம்பாளையம் சாமிநாதன், ஈரோடு முருகன், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த இர்ஃபான். அனிபா துணி வியாபாரம் மற்றும் டையிங் நிறுவனங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய கெமிக்கல் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

இந்த 5 பேர் கொண்ட கும்பல் பொதுமக்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றுவதைத் தொழிலாகக் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் கரூரைச் சேர்ந்த தமிழரசி மற்றும் ரேவதி ஆகிய இருநபர்களிடம் இந்த ஐந்து பேரும் சேர்ந்து 11 லட்சம் ரூபாய் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடி செய்துள்ளனர்.

தொடர்ந்து அந்தப் பணத்தை அடித்துக் கொண்டு வந்தவர்கள் இவர்கள் 5 பேரும் பிரித்து வைத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் சித்தன் மற்றும் அவரது மகன் சூர்யா ஆகிய இருவரும் தமிழரசி மற்றும் ரேவதிக்குப் பணம் திருப்பி தரும் பொருட்டு அனிபாவிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அனிபா தன்னிடம் பணம் எதுவும் கிடையாது ஏற்கனவே அடித்த பணத்தை ஐந்து பேரும் பிரித்து வைத்துக் கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் அனிபாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். தொடர்ந்து சித்தன் அவரது மகன் சூர்யா ஆகியோர் அனிபாவைக் கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, மேட்டூர் மாதையன் குட்டையைச் சேர்ந்த சித்தனின் மற்றொரு நண்பான பாக்கியராஜை அணுகியுள்ளனர்.

தொடர்ந்து பாக்யராஜ் மூலம் நேற்று முன்தினம் இரவு அனிபாவை காரில் கடத்திக்கொண்டு சென்று விட்டனர், தொடர்ந்து அனிபாவின் மனைவி ரஹூமத்திற்கு போன் செய்த 70 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். தொடர்ந்து கடத்தல் சம்பவம் குறித்து அந்தியூர் காவல் துறையினர் அனிபாவின் மகன் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் உடனடியாக களத்தில் இறங்கிய காவல் துறையினர் கடத்தல் கும்பல் செல்போன் எண்ணை வைத்து தேடும் போது அவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூர், கருமலைகூடல், தெர்மல் பின்புறம் உள்ள சாம்பல் ஏரி பகுதியில் அடர்ந்த காட்டில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து அங்கு சென்ற காவல் துறையினர் அந்த வீட்டிலிருந்த அனிபா மற்றும் அவரை கடத்தி வைத்திருந்த மேட்டூர் , குள்ளம்வீரம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன்குமார் (28) கருமலை கூடல் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (28) ஆகிய இருவரை கைது செய்து அனிபாவையும் மீட்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த இரண்டு பட்டாக்கத்திகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள பாக்கியராஜ், மோகன்ராஜ் மற்றும் கடத்தச் சொன்ன சித்தன் அவரது மகன் சூர்யா ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:விவசாயிடம் ரூ.6.5 லட்சத்தை திருடிய இளைஞர்கள் - புதுக்கோட்டை பகீர் சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details