ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தூக்கநாயக்கன்பாளையம் காப்புக்காடு பகுதியில், நக்சல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அடர்ந்த காட்டுப்பகுதியில் இருவர் பதுங்கி பதுங்கி செல்வதைக் கண்ட காவல் துறையினர் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் விசாரணை செய்ததில் தொட்டகோம்பையைச் சேர்ந்த வீராச்சாமி, மோகன் என்பது தெரியவந்தது. மேலும், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக காட்டுப்பகுதிக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி வைத்திருந்த இருவர் காவல் துறையினர், அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்களிடம் நாட்டு துப்பாக்கி இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், துப்பாக்கியை ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர்.
பின்னர், காட்டுப்பகுதியில் உள்ள மலை பாறைகளுக்கு இடையே பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல் துறையினர், இருவரையும் பங்களாபுதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பங்களாபுதூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாக்குச்சாவடியில் ஸ்டைலாக துப்பாக்கியுடன் சுற்றிய காங்கிரஸ் வேட்பாளர்!