ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதி பவளக்குட்டையில் உள்ள 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வருவாய் நிலங்களில் பவளக்குட்டை, அத்தியூர், கேர்மாளம், ஒசப்பாளையம் கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகின்றனர்.
பழங்குடியினர் நிலங்களை வகை மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம் 1989ஆம் ஆண்டில் இருந்து விளைநிலங்களுக்கு பட்டா வழங்குவதற்கு தடை உத்தரவு இருப்பதால், அவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பழங்குடியினர் பயன்பாட்டில் உள்ள நிலங்களை வருவாய்த்துறையில் இருந்து வனத்துறைக்கு வகை மாற்றம் செய்யும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலம் மாக்கம்பாளையம் கடம்பூர் சாலையில் பாலம் கட்டுவதற்காக வனத்துறை வருவாய்த்துறைக்கு வழங்கியதற்கு ஈடாக இந்த நிலம் வழங்க இருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனை கண்டித்து கடம்பூர் பழங்குடியினர் நேற்று (டிசம்பர் 20) வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அங்கு வந்த வட்டாட்சியர் சங்கர் கணேஷ் கோரிக்கை மனுவை பெற்றுகொண்டு அரசிடம் சமர்ப்பிப்பதாக உறுதியளித்ததையடுத்து காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொண்டனர்.
இதையும் படிங்க:கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்