தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழங்குடி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்சில் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர்! - ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பழங்குடி பெண்

ஈரோடு: கடம்பூர் மலைக்கிராமத்தில் இருந்து கர்ப்பிணியை பிரசவத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஆம்புல்ஸிலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

tribal woman gave birth to baby child
ஆம்புலன்சில் குழந்தை பெற்றெடுத்த பழங்குடி பெண்

By

Published : Feb 5, 2021, 10:18 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கோட்டமாளம் மலைப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவி கிருஷ்ணம்மாள்(25). இவர்கள் வசிக்கும் குன்றி கிராமம் அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது.

சரியான போக்குவரத்து வசதியில்லாத நிலையில், நிறைமாத கர்ப்பிணியான கிருஷ்ணம்மாளுக்கு இடுப்பு வலி ஏற்பட்டது. இதுகுறித்து சத்தியமங்கலம் பகுதியில் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கோகுலகண்ணன் மற்றும் மருத்துவ உதவியாளர் சங்கர் ஆகியோர் நிறைமாத கர்ப்பிணியான கிருஷ்ணம்மாளை, 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு கடம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

காட்டுப்பகுதியான வெள்ளைத்தொட்டி என்ற இடத்தில் அவருக்கு வலி அதிகமாகவே, உதவியாளர் சங்கர் மற்றும் ஓட்டுநர் கோகுலகண்ணன் ஆகியோர் கிருஷ்ணம்மாளுக்கு பிரசவம் பார்த்தனர்.

இதில் கிருஷ்ணம்மாளுக்கு நல்ல நிலையில் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அதே ஆம்புலன்ஸில் தாயும் குழந்தையும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையும் படிங்க:மார்ச் மாதத்துக்குள் அனைத்து ஆளில்லா ரயில்வே கேட்கள் நீக்கப்படும் - தென்னக ரயில்வே

ABOUT THE AUTHOR

...view details