ஈரோடு:சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில், மக்காச்சோளம் அறுவடை செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோள தட்டுகளை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவது வழக்கம்.
விளைநிலத்தில் காயவைக்கப்பட்ட மக்காச் சோளத் தட்டைகளை விவசாயிகள் டிராக்டரில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு செல்லும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஜன.30) மதியம் தாளவாடி அருகே உள்ள அருள்வாடி பகுதியிலிருந்து மக்காச்சோள தட்டுகள் ஏற்றிச் செல்லப்பட்ட டிராக்டர், சாலையின் ஓரத்தில் தாழ்வாக இருந்த மின் கம்பி மீது உரசியதில் திடீரென தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
இதனைக் கண்ட டிராக்டர் ஓட்டுநர், டிராக்டரின் முன் பகுதியான இன்ஜின் பாகத்துடன் இணைக்கப்பட்ட டிரைலர் பகுதியை கழற்றி டிராக்டரை மட்டும் நகர்த்தியதால், எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பினார். ஆனால், மக்காச் சோளத் தட்டைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
இதையும் படிங்க: குடிசையில் மோதிய கார்... 4 பெண்கள் உயிரிழப்பு!