தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்; விவசாயிகள் கவலை! - தக்காளி விலை குறைவு

ஈரோடு : தாளவாடி மலைப்பகுதியில் தக்காளியின் விலை கிலோ ரூ.5 ஆக சரிந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தக்காளியின் விலை சரிவு

By

Published : Aug 29, 2019, 9:52 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் அதிகளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் தக்காளியை, தாளவாடியில் உள்ள ஏல விற்பனை மையத்திற்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

தக்காளியின் விலை சரிவு.

தற்போது கேரளாவில் அதிகளவில் மழை பெய்ததால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் அங்கு சரிவர விற்பனையாவதில்லை. மேலும், தமிழ்நாடு கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் தக்காளி வரத்து அதிகமானதால் அதிக விலைக்கு வியாபாரிகள் தக்காளி வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை.

இதன் காரணமாக 28 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி ரூபாய் 300 முதல் 500 வரை விற்பனையான நிலையில் தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூபாய் 150 க்கும், ஒரு கிலோ ரூ.5-க்கும் மட்டுமே விற்பனையாகின்றது.

இதனால் தக்காளி பறிப்பதற்கு கூலி வழங்குவதற்குகூட கட்டுப்படி ஆகவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details