தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பில் இந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் ரொக்கம், முழு கரும்பு, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாளை முதல் பொங்கல் பரிசு விநியோகம்: தயார்நிலையில் ரேஷன் கடைகள்! - sathyamangalam news
நாளை முதல் பொங்கல் பரிசு விநியோகம் செய்ய ரேஷன் கடைகள் தயார்நிலையில் இருக்கின்றன.
அதன்படி நாளை (ஜன. 4) முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதன் ஒருபகுதியாக, சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்கு தேவையான கரும்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ரேஷன் கடைகளில் திராட்சை, முந்திரி உள்ளிட்ட பொருட்கள் பேக்கிங் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க...கேரளாவின் இளம் கிராம பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றார் ரேஷ்மா!